தமிழ் சினிமாவின் கிங் ஆப் பாக்ஸ் ஆபிஸ் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவரின் வசூல் சாதனையை இவர் முறியடித்தால் மட்டுமே உண்டு.
இந்நிலையில் இவருக்கு அடுத்த இடத்தில் வியாபாரத்தில் விஜய் தான் உள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது, நாம் ஏற்கனவே கூறியது போல் பைரவா தமிழகத்தில் மட்டுமே ரூ 43 கோடிகளுக்கு மேல் விற்றுள்ளது.
இதுமட்டுமின்றி கேரளாவில் பைரவாவை கபாலியை விட அதிக தொகை கொடுத்து வாங்க ரெடியாகவுள்ளார்களாம்.
அமெரிக்காவிலும் கிட்டத்தட்ட ரூ 4 கோடி வரை இப்படத்தை வாங்கியுள்ளதாக தெரிகிறது. ஓவர்சீஸும் ரூ 19 கோடி வரை விற்பனையாகியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. எப்படிப்பார்த்தாலும் கபாலிக்கு பிறகு பெரிய பிஸினஸ் பைரவா தான் என தெரிகிறது.
N5




