சூர்யா, விஜய், விக்ரம், ஆரி முதல் அனைவரையும் பேச வைத்த மாணவ சக்தி
தமிழக இளைஞர்கள் என்றால் தன்னுடைய ரசிகர்கள் படத்திற்கு சென்று கைத்தட்டி விசிலடிப்பார்கள் என்று தான் நினைத்து வந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டை காப்பாற்ற தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்று கூடி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த கூட்டம் எந்த நடிகர் சொல்லியும் கூடியது இல்லை, அவர்கள் சொல்லி கலையப்போவதும் இல்லை, இப்படி தமிழகத்தில் மாணவ எழுச்சியை கண்டு தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம் என பலரும் தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர்.
மேலும், ஆரி, அசோக் செல்வன், மயில் சாமி, டி.ஆர் என பல நடிகர்கள் நேரிலேயே சென்று தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர். இன்னும் பல நடிகர்கள் தங்கள் ஆதரவை தந்தும் வருகின்றனர்.
N5




