செய்திகள்
சூழ்ச்சிகளால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது : ஜனாதிபதி
சூழ்ச்சிகளால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் தற்போதைய அரசாங்கம் 5 வருடங்களுக்கு நிலைத்திருப்பது உறுதியானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து அமைத்துள்ள அரசாங்கத்தை சூழ்ச்சிகளால் கவிழ்க்க முடியாது. இது 5 வருடங்களுக்கு தொடரும். அதற்கான இனக்கப்பாடுகள் ஏற்பாடுத்தப்பட்டுள்ளன. என அவர் தெரிவித்துள்ளார்.




