செட்டிகுளத்தில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் மரணம்
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் மரணமடைந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், துடரிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலை மேசன் வேலைக்கு கூலியாட்களைப் பிடிப்பதற்காக கிறிஸ்தவகுளத்திற்கு சென்ற சமயம் வீதியோரத்தில் நின்ற யானை தாக்கியதில் குறித்த நபர் மரணமடைந்துள்ளார். துடரிக்குளத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை தர்மலிங்கம் (வயது 64) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
N5




