செய்திகள்
செட்டியார் தெருவில் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் : மடக்கிப்பிடித்த பொதுமக்கள்
கொழும்பு செட்டியார் தெரு பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய ஒருவர் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செட்டியார் தெரு வீதியில் சன நாடமாட்டம் அதிகமான பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய போது அவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் அவரிடமிருந்து தங்க சங்கலியை மீட்டதுடன் அந்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். -(3)




