சென்னையில் ஹோட்டல் கட்டுவது எதிர்கால திட்டமாம் : அமலாபால்
எதிர்காலத்தில் சென்னையில் ஹோட்டல் தொடங்கவேண்டும் என்பது தனது விருப்பம் என்கிறார் நடிகை அமலா பால் . இயக்குனர் ஏ.எல். விஜய்யை விவாகரத்து செய்த பிறகு அமலா பால் படங்களில் படுபிசியாகிவிட்டார். கன்னடத்தில் அவர் நடித்த ஹெப்புலி படம் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் அவர். மலையாளம், தமிழிலும் அவர் பிசியாக ஓடியோடி நடிக்கிறார். அத்துடன் பாடலும் பாடுகிறார்.
விஜய்யை விவாகரத்து செய்தலும் பேட்டி கொடுக்கும்போது எல்லாம் தனக்கு இன்னும் பிடித்த நபர் விஜய் தான் என்று கூறி வருகிறார் அமலா பால். அவரிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் அமலா
பல இடங்களுக்கு தனியாக பயணம் செய்வது நல்ல அனுபவமாக உள்ளதாக அமலா பால் தெரிவித்துள்ளார். வாழ்க்கை நிறைய பாடங்களை கற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.




