செய்திகள்

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஏவுகணையை பரிசோதித்தது ஈரான்

சனிக்கிழமை கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணையொன்றை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஈரான் அமெரிக்காவின் அழுத்தங்களிற்கு மத்தியிலும் தொடர்ந்தும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளது
2000கிலோமீற்றர் செல்லக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கொரம்சார் என்ற ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் தேசிய ஊடகமான ஐஆர்ஐபி ஏவுகணை பரிசோதனையின் காட்சிகளை வெளியிட்டுள்ள போதிலும் அந்த ஏவுகணை எந்த இடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது என தெரிவிக்கவில்லை.
இது 2000 கிலோமீற்றர் செல்லக்கூடிய ஈரானின் மூன்றாவது ஏவுகணை என்றும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிரிட்டன் இது குறித்து ஆழந்த கவலை வெளியிட்டுள்ளது.
ஈரானின் ஏவுகணை பரிசோதனை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் இது ஐக்கியநாடுகளின் தீர்மானத்திற்கு முரணானது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.