செய்திகள்

அரசியலுக்காக அடிமட்ட அரசியலில் செய்யும் கூட்மைப்பு, ஈ.பி.டி.பி யுடன் இணைந்தது

யாழ் மாநகரசபை மேயர் யார் என்ற உச்சக்கட்ட பரபரப்பு நிலவும் நிலையில், கிங்மேக்கராக உருவெடுத்துள்ள ஈ.பி.டி.பி கூட்மைப்புக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையில், ஆர்னோல்ட்டை ஆதரிக்க ஈ.பி.டி.பி இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆனோல்ட் முதல்வராவதில் ஈ.பி.டி.பிக்குள் எதிர்ப்புக்கள் இருந்தாலும், அந்த எதிர்ப்புக்களை மீறி ஆனோல்ட்டை ஆதரிப்பதென டக்ளஸ் தேவானந்தா முடிவெடுத்துள்ளார். ஈ.பி.டி.பியின் சார்பில் மாநகரசபைக்கு தேர்வானவர்களை சிறிதர் தியேட்டரிற்கு அழைத்த டக்ளஸ் தேவானந்தா, கலந்துரையாடல் நடத்தினார். இதன்போதுது இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

மாநகரசகை மேயர் விவகாரத்தில் இணக்கப்பாடு எட்டப்படாததையடுத்து, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தொலைபேசியில் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டார்.இதன்போது, ஆனோல்ட்டை ஆதரிக்க வேண்டும் என்றும், மணிவண்ணன் மேயரானால் தமிழ் சமூகத்திற்கு நல்லதல்ல என்றும் மாவை கூறினார். அவரது கருத்துக்களை டக்ளஸ் ஏற்றுக்கொண்டார்.“மாவையின் கோரிக்கைக்கு டக்ளஸ் பதிலளிக்கும்போது- ஆனோல்ட் வர வேண்டும் என்றோ, வரக்கூடாதென்றே தனக்கு தனிப்பட்ட எந்த அபிப்பிராயமும் இல்லை. கட்சிக்குள் சில எதிர்ப்பு உள்ளது அதை சமாளித்தால், ஆதரவளிக்கலாம்.இதன் போது ஆனோல்ட்டை ஆதரிப்போமென டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்

இதையடுத்து இன்றய தினம் ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் ஆனோல்ட் மேயராகி உள்ளார்.
விரைவில் பிள்ளையான் – கருணாவையும் கூட்டமைப்பு கட்சியில் இணையலாம் எனக் கூறும் அரசியல் அவதானிகள், அரசியலுக்காக மிக அடிமட்ட அரசியலில் கூட்டமைப்பு இறங்கிய முதல் சந்தர்ப்பம் இது என விமர்சனம் செய்துள்ளார் .(15)