செய்திகள்

அரசியல் பழிவாங்கல்களுக்கு எந்த தருணத்திலும் நாங்கள் அச்சமடைய போவதில்லை-சம்பிக்க ரணவக்க

கடந்த 2016 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை வாகன விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் கடவுச் சீட்டு கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் ரத்து செய்யப்பட்டது.குறித்த விபத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினரின் ஜீப் வாகனத்தில் மோதுண்ட குறித்த இளைஞர் தற்போது சிறப்புத் தேவையுடன் உள்ளார்.

இதேவேளை தனது ஒரே புதல்வனை குணப்படுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தினால் எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார்.எனினும், சிகிச்சைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 10 லட்சம் ரூபா வழங்கப்பட்ட போது அந்த தொகை மேலதிக சிகிச்சைக்காக போதுமானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தமக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக அச்சமடையப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தள்ளார்.அதேநேரம் நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வினை காண்போம்“ என தெரிவித்துள்ளார்.(15)