செய்திகள்

அலரி மாளிகையில் நவராத்திரி விழா

ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக தெரிவித்த பிரதமர் இந்த நவராத்திரி தினத்தில் கொவிட் தொற்று இல்லாதொழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இலங்கை இந்திய சமுதாய பேரவையினால் வழங்கப்படும் பாடசாலை மாணவர்கள் ஆறு பேருக்கான புலமைப்பரிசில்கள் பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-(3)Nawarathri_TT_PMO_Tamil_News_05 Nawarathri_TT_PMO_Tamil_News_011 Nawarathri_TT_PMO_Tamil_News_012 Nawarathri_TT_PMO_Tamil_News_04 Nawarathri_TT_PMO_Tamil_News_013