செய்திகள்

இந்த அரசாங்கம் இன்னும் ஒருவருடத்திற்கு இருந்தால் ஆசைக்கு ஒரு தோசைக்கூட சாப்பிட முடியாது போகும் : ரணில்

தற்போதைய அரசாங்கம் இன்னும் ஒருவருட காலம் இருந்தால் மக்களுக்கு ஆசைக்கு தோசைக் கூட சாப்பிட முடியாது போய்விடுமென ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகளை எடுத்து கொண்டால் இந்த அரசாங்கம் இன்னும் ஒருவருட காலம் இருந்தால் தோசை கூட சாப்பிட முடியாது. எவ்வித இலாபமும் இருக்காது. வாழ்க்கையினை கொண்டுசெல்ல கஷ்டம். கொரோனா தொற்று மலையக பகுதிகளுக்கு பரவினால் மக்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது போன்ற பகுதிகளில் தான் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ளபட வேண்டும்.
நாட்டில் தற்பொழுது கொரோனா தொற்று இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மற்றுமொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தப்பித்து கொள்ளுபவர்கள் டெங்கு நோயினால் உயிரிழக்க நேரிடும். ஆகையால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இது போன்ற ஒரு நிலமை தான் தற்பொழுது கணப்படுகிறது. அனைத்துக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
இங்கு எவ்வித தயார் நிலைகளும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியினை பொருத்த வரையில் வெளிநாடுகளோடு எமக்கு சிறந்த தொடர்புகள் இருக்கின்றன. நாம் மீண்டும் 6 ஆயிரம் டொலர்களை நாம் தேடிகொள்ளுவோம். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக சுமார் 10 இலட்சம் பேர் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். இது தொழில் இல்லாமல் இருப்பவர்களுக்கு எமது அரசாங்கத்தில் மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்குவோம். என தெரிவித்துள்ளார். -(3)

 

 


Paid Adbbb