செய்திகள்

இறக்குமதியாகும் பால் மாவில் பன்றி கொழுப்பா? : சபையில் எழுந்த சர்ச்சை

இலங்கைக்கு வெளிநாடொன்றிலிருந்து கொண்டு வரப்படப்படும் பால் மாவில் பன்றி கொழுப்பு மற்றும் தாவர எண்ணெய் கலப்பு இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
புத்திக பத்திரன இது தொடர்பாக கூறும் போது
சில பால் மா நிறுவனங்கள் பால் மா என்ற பெயரில் இலங்கைக்கு கொண்டு வரும் பொருட்களில் பன்றி கொழுப்பும் லக்டோவும் மரக்கறி எண்ணெய்யும் கலந்திருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக ஆய்வு நடத்தும் பொறுப்பை இலங்கையில் நிறுவனமொன்றுக்கு வழங்கியிருந்தோம். ஆனால் அந்த நிறுவனம் இடையில் அந்த நடவடிக்கையை கைவிட்டது. இலஞ்சம் பெற்றுவிட்டு அந்த நடவடிக்கையை கைவிட்டதோ தெரியவில்லை. எவ்வாறாயினும் இது தொடர்பாக நாங்கள் வெளிநாட்டிலாவது இது தொடர்பான ஆய்வை மேற்கொள்வோம். இந்த விடயங்கள் ஊடகங்களில் வெளியாவதில்லை. விளம்பரம் தொடர்பான பிரச்சினை காரணமாக அவ்வாறாக வெளியாவதில்லை என அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான விஜித் விஜித முனி சொய்சா இது தொடர்பாக கூறுகையில் , இந்த பால் மாவில் பால் இல்லை. மா மட்டுமே இருக்கின்றது. பன்றி கொழும்பு , தாவர எண்ணெய் , மெலமைட் உள்ளிட்டவை அடங்கியுள்ளதாகவே கூறப்படுகின்றது. அப்படியாயின் இங்கு பிள்ளைகளுக்கும் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் நஞ்சே கொடுக்கப்படுகின்றது. என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக தாமதம் இன்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாமல் ராஜபக்‌ஷ , விமல் வீரவன்ச , மரிக்கார் உள்ளிட்ட எம்.பிக்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்-(3)