செய்திகள்

இலங்கைக்கு நேர் மேலாக சூரியன்

இலங்கைக்கு நேர் மேலாக சூரியன் 28 ஆகஸ்ட் முதல் 7 செப்டெம்பர் வரை உதிக்கும் என்றும் இதன் காரணமாக கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு , வவுனியா ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை இன்று பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.