செய்திகள்

இலங்கையில் கொரோனா உருவாகிய 31 கொத்துக்களில் 27 செயலிழந்துவிட்டன

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 31 கொத்து பிரிவுகளாகவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 27 கொத்துக்கள் செயலிழந்துவிட்டதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபரான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து 31 கொத்து பிரிவுகளாகவே அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதனால் இது வரையில் 649 பேர் வரையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது அந்த கொத்து பிரிவுகளில் 27 கொத்துக்கள் செயலிழந்துள்ளன. தற்போது 4 கொத்துக்கள் மட்டுமே செயற்படுகின்றது. அந்த நான்கிலும் 3 கொத்துப் பிரிவுகள் செயலிழந்து வருகின்றன. இதன்படி தற்போது ஒரே ஒரு கொத்து மட்டுமே செயற்படும் தன்மையுடன் இருக்கின்றது. இதிலிருந்து விடுபடுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)