செய்திகள்

இலங்கையில் பௌத்தத்திற்கு பேராபத்து : உலக நாடுகளின் பௌத்த தலைவர்களிடம் மகிந்த தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் நடவடிக்கையின் போது பௌத்த மதம் தொடர்பாக காணப்படும் முக்கிய சரத்துக்களை நீக்குவதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் அவ்வாறு செய்தால் அது இலங்கையில் பௌத்த மதத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துமெனவும் உலக நாடுகளின் பௌத்த தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கருத்துக்களை வெளியிட்டுளார்.
மகாராஷ்டா அவுரங்காபாத்தில் நடைபெறும் இரண்டாவது சர்வதேச பௌத்த சம்மேளன மாநாட்டிலேயே அவர் இவ்வாறாக கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் உலக நாடுகள் பலவற்றின் பௌத்த தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்த நிலையில் அவரின் அந்த கருத்தானது உலக நாடுகளின் பௌத்த தலைவர்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் தொடர்பாக பல்வேறு எதிர் கருத்துக்களை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)