செய்திகள்

இலங்கை அணியின் வியூகங்கள் தோல்வியடைந்துள்ளன- நுவன் பிரதீப்

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மையமாக வைத்து இலங்கை அணி வகுத்த வியூகங்கள் தோல்வியடைந்துள்ள என இந்திய அணியின் முதல் இனிங்ஸில் ஆறு விக்கெட்களை வீழ்த்திய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

நான் ஏழு எட்டு தடவைகள் நான்கு விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன் ஆனால் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியது இதுவே முதற்தடவை என நுவன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

பிரதீப் இந்திய அணி தலைவர் விராட்கோலியை பவுன்சர் பந்து மூலம் ஆட்டமிழக்கச்செய்திருந்தார்.அவர் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஓருவர் அவரை அவ்வாறு ஆட்டமிழக்கச்செய்ய முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்,அவரை போல ஓரு துடுப்பாட்ட வீரரை எதிர்கொள்ளும்போது நாங்கள் நிறைய திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டும், எங்கள் திட்டங்கள் பலித்தன நான் பவுன்சர் பந்தை எவ்வாறு சிறப்பாக வீசுவது என பயிற்சி எடுத்து வந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு விக்கெட்களை வீழ்த்துவதற்கு நீங்கள் பல ஓவர்களை வீசவேண்டியிருக்கும் நீங்கள் களைப்படைந்து விடுவீர்கள் ஆனாலும் தொடர்ந்தும் வேகமாக பந்து வீசவேண்டியிருக்கும் நான் அதனை இன்று செய்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் சிறப்பாக பந்து வீசியிருந்தாலும் அணியின் நிலை குறித்து கவலையடைந்துள்ளேன் நாங்கள் போட்ட திட்டங்கள் தோல்வியடைந்துள்ள இதன் காரணமாக புதிய திட்டங்களுடன் அடுத்த சில நாட்களிற்கு விளையாடவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.