செய்திகள்

இவர்களின் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர்களாக யார் யார் களமிறங்கலாம் என அரசியல் கட்சிகளுக்கிடையே பல்வேறு பெயர்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இதன்படி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ப்பில் மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து கோதாபய ராஜபக்‌ஷ மற்றும் சமல் ராஜபக்‌ஷவின் பெயர்களும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவின் பெயர்களும் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் இவர்களில் யார் யார் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவார்கள் என்பது தொடர்பாக அந்த கட்சிகள் கலந்துரையாடி தமது தீர்மானத்தை தேர்தலுக்கான அறிவித்தல் வெளியான பின்னர் அறிவிப்பார். -(3)