செய்திகள்

இஸ்லாமபாத்தில் சார்க் மாநாட்டை நடத்துவதற்கு சூழ்நிலைகள் உகந்ததாக இல்லை

19வது சார்க் மாநாட்டை பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் நடத்துவதற்கு சூழ்நிலைகள்  உகந்ததாக இல்லை என இலங்கை தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் யூரி தாக்குதலை கண்டிக்கும் விதமாக இஸ்லாமபாத்தில் நடக்கும் சார்க் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக இந்தியா முன்னதாக அறிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக ஆப்கானிஸ்தான், பூடான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் அறிவித்தன.

சார்க் அமைப்பில் உள்ள எட்டு நாடுகளில் இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க போவதாக தெரியப்படுத்தியுள்ள நிலையில், மாநாடு இரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டதால், இவர்களை சமாதானம் செய்து மாநாட்டை நடத்த, மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள நேபாளம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இலங்கை வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நிலவும் சூழ்நிலைகள் 19வது சார்க் மாநாட்டை பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என குறிப்பிட்டுள்ளது.

n10