செய்திகள்

ஈழத்தின் பல பகுதிகளில் வாழும் பச்சைப் பஞ்சுருட்டான் பறவை: யாழ் கயூரினா பீச்சில்…

பச்சைப் பஞ்சுருட்டான்
පුංචි බිංගුහරයා
Green Bee-Eater at Casuarina beach, Jaffna, Sri Lanka

பச்சைப் பஞ்சுருட்டான் அல்லது சிறிய பச்சைப் பஞ்சுருட்டான் அல்லது பச்சை ஈப்பிடிப்பான் (Green Bee-eater) என்பது ஒல்லியான உடல் வாகைக்கொண்ட பஞ்சுருட்டான் குடும்பப் பறவை. இது ஒரு வலசை வாராப்பறவை. ஆனாலும் சில பருவ கால மாற்றங்களின் காரணங்களால் இவை சிறிது தூரம் வரை நகரக்கூடியன. இவை பெரும்பாலும் பூச்சிகளை உட்கொண்டு நீர்நிலைகளின் அருகாமையில் வாழ விரும்புகின்றன. ஒவ்வொரு இடத்திலும் நிறம் வெறுபட்டு இருப்பதனால் இவற்றின் பல துணை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை “ட்ரீ-ட்ரீ-ட்ரீ-ட்ரீ” என்று பறக்கும்கால் ஒலியெலுப்புகின்றன.

மற்ற பஞ்சுருட்டான்களைப் போல் இந்த பச்சைப் பஞ்சுருட்டானும் பலவண்ணங்கள் கொண்ட ஒரு அழகான சிறிய பறவையினம். சுமாராக 16 முதல் 18 செண்டிமீட்டர்கள் இருக்கும் இவைகட்கு 5 செ.மீ நீண்டுள்ள வால் இறகுகள் உள்ளது சிறப்பு. இருபால்களும் ஒன்று போல் காட்சியளிக்கும். முழுவதுமாக பலவகையான பச்சை நிறங்கள் கொண்டிருப்பினும், தாடை மற்றும் கண்ணங்களில் நீலம் இருக்கும். தலையின் மேற்புறம் தங்கம் கலந்து இருக்கும். பறப்பதற்கு உபயோகப்படும் சிறகுகள் இள்ஞ்சிவப்பாகவும் கருப்பு முடிவுகளோடும் இருக்கும். சீரான ஒரு கருப்பு கோடு அலகின் பின்புறமிருந்து தலையின் பின்புறம் வரை கண்கள் வழியாக செல்ல கண்கள் சிவந்து இருக்கும். கால்கள் சத்தின்றியும், விரல்கள் குட்டையாகவும் அடியில் செர்ந்தும் இருக்கும்.

தெற்காசிய பறவையினங்கள் கொண்டை மற்றும் முகத்தில் இளஞ்சிவப்பு நிறமும், பச்சை வண்ண அடிப்பகுதியையும் கொண்டிருக்க, அரேபிய பறவையினங்கள் பச்சைக்கொண்டையும், முகத்திலும் அடிப்பகுதியையும் நீல வண்ணம் கொண்டிருப்பதைக்காணலாம். அலகு கருத்த வணணம் பெற்றிருக்க, வாலில் நீண்டு விளங்கும் இறகினை இளம்பறவைகள் கொண்டிருப்பதில்லை.

N5