செய்திகள்

உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இன்று உஷ்ணம் அதிகரிப்பு : விசேட கவனம் செலுத்துமாறு ஆலோசனை

நாட்டில் வடமேல் , மேல் மாகாணங்களிலும் மற்றும் மன்னார் , இரத்தினப்புரி , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக வெப்பத்துடனான கால நிலை நிலவுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த பிரதேசங்களில் இன்றைய தினத்தில் 32 முதல் 41 செல்சியஸ் வரையில் வெப்ப நிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான கால நிலை உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சிறுவர்கள், குழந்தைகள், வயதானோர் அதிக வெயில் வேளையில் நடமாடுவதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் நேரடியாக கடும் சூரிய ஒளியின் தாக்கத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கடுமையான சூரிய வெப்பம் காணப்படும் நேரத்தில் பாடசாலை மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
திறந்த வெளிகளில் பணியாற்றுவோர் காலை 11 மணி தொடக்கம் மாலை 3 மணி வரையில் பணிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக சூரிய வெப்பம் குறைவான நேரங்களில் இந்த பணிகளை மேற்கொள்வது சிறந்தாகும் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக சிறுநீரக நோய் உள்ளவர்கள் மற்றும் மருந்து வகைகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவோர்; இக் காலப்பகுதியில் தேக ஆரோக்கியம் தொடர்பில் தமது வைத்தியர்களை நாடுவது பொருத்தமானதாகும். என அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)