செய்திகள்

ஐந்து இலக்குகளை நிறைவேற்றுவதற்காக அமெரிக்க படையினர் தொடர்ந்தும் சிரியாவில் நிலைகொண்டிருப்பர்- இராஜாங்க செயலாளர் அறிவிப்பு

ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக மாத்திரமின்றி சிரியாவின் தற்போதை அரசாங்கத்தி;ற்கு எதிரான நடவடிக்கைகளிற்காகவும் சிரியாவில் ஈரானின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுப்பதற்காகவும் அமெரிக்க படையினர் சிரியாவில் நிலைகொண்டிருப்பர் என இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டிலெர்சன் தெரிவித்துள்ளார்.
ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் சிரியா தொடர்பான புதிய கொள்கை குறித்து ஆற்றிய உரையிலேயே அவர் இதனை தெரிவி;த்துள்ளார்
கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக மாத்திரம் சிரியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படையினர் எதிர்வரும் காலத்தில் வேறு பல நோக்கங்களுடன் சிரியாவில் நிலை கொண்டிருப்பார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிரியாவில் தனது பிரசன்னத்தை ரஸ்யா குறைக்கின்ற அதேவேளை அமெரிக்கா தனது பிரசன்னத்தை அதிகரிக்கும் என்பதை இராஜாங்க செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிரியாவில் அமெரிக்காவிற்கு ஐந்து இலக்குகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐஎஸ் மற்றும் அல்ஹைதா அமைப்புகளை தோற்கடிப்பது, ஜனாதிபதி பசார் அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றுவது ஈரானின் செல்வாக்கை கட்டுப்படுத்துவது அகதிகள் மீள் வருகையை உறுதிசெய்வது மற்றும் இரசாயன ஆயுதங்களை முற்றாக ஒழிப்பது ஆகியனவே அந்த ஐந்து இலக்குகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.