செய்திகள்

ஐ. நா தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கை முண்ணுரிமை கொடுத்து விரைவாக செயற்படவேண்டும்: பிரித்தானியா வலியுறுத்து

இலங்கை தொடர்பில் ஐ. நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை விரைவாக நிறைவேற்றுமாறு பிரித்தானியா தீர்மானம் தொடர்பிலான கூட்டு நாடுகள் சார்பில் வலியுறுத்து இருக்கிறது. இந்த கூட்டு நாடுகளில் ஜெர்மனி, மசிடோனியா , மொன்டெங்கரோ, பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.

” மனித உரிமைகள் சபைக்கான தனது உறுதிப்பாடுகளை அடைவதில் உறுதியான தலைமைத்துவம் மற்றும் தெளிவான கால அட்டவணையுடனான திட்டத்துடன் இந்த அரசாங்கம் முன்னேற்றம் காண முடியும் இதன் மூலம் நிலையான நல்லிணக்கம் மற்றும் செழிப்பை இலங்கை அடைய முடியும் என்று நாம் தொடர்ந்து நம்புகிறோம் ” என்று பிரித்தானியா ஐ நா மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம் தீர்மானம் தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிகளைகளையும் பிரித்தானியா பாராட்டியுள்ளது.