செய்திகள்

கன்னத்தில் அறைந்தது சர்வதேசம் அல்ல: ரணிலுக்கு பிரபா கணேசன் பதில்

வட மாகா­ண­ச­பையில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு சர்­வ­தேசம் முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வ­ரனின் கன்­னத்தில் பதி­லடி கொடுத்­துள்­ள­தாக தெரி­வித்­தி­ருக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே தமிழ் மக்­களின் கன்­னத்தில் அறைந்­தி­ருக்­கின்றார் என்று ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிரபா கணேசன் தெரி­வித்­துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரி­வித்­த­தா­வது,

பெரும்­பான்மை பல­மின்றி குறுக்கு வழியில் பிர­தமர் பத­வியை பெற்றுக் கொண்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் மக்­க­ளுக்கு நண்பன் போன்ற நாட­கத்தை பல­வ­ரு­ட­மாக தொடர்ச்­சி­யாக நடத்தி வரு­கின்றார். இன்று இவர் வட­மா­கா­ண­ச­பையில் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணையை விமர்சித்து மறுபக்கம் தானே தமிழ் மக்­க­ளுக்கு அனைத்து தீர்­வி­னையும் பெற்றுக் கொடுப்பேன் என்று கூறி தமிழ் கூட்­ட­மைப்­பி­ன­ரி­ட­மி­ருந்து தமிழ் மக்­களை அந்­நி­யப்­ப­டுத்தி ஐக்­கிய தேசிய கட்­சியை யாழ்.மாவட்­டத்தில் நிலை நிறுத்தப் பார்க்­கின்றார்.

லண்டன் மாந­கரில் சம்­பந்தன், சுமந்­தி­ர­னது படங்கள் புலம் பெயர்ந்­த­வர்­களால் எரிக்­கப்­பட்­டுள்­ளதை பார்க்கும் பொழுது இவ்­வி­ரு­வரும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­ப­டு­வது அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் அறிக்கை வெளியி­டப்­ப­டு­மானால் அது சிங்­கள மக்கள் மத்­தியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு அமோக ஆத­ரவு கிடைத்து விடும் என்ற அர­சியல் கார­ணத்­திற்­காக அறிக்­கை­யினை ரணில் அர­சாங்கம் தாம­தப்­ப­டுத்தி வைத்­துள்­ளமை தமிழ் மக்­க­ளுக்கு செய்யும் துரோகம்.

இந்த துரோ­கத்­திற்கு தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைமை துணை போகின்­றது. கடந்த காலங்­களில் கரு­ணாவை விடு­
தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து பிரித்து ஆயுதப் போராட்­டத்தை முடித்து வைத்த பெருமை ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே சேரும். அதேபோல் இன்று வட­மா­கா­ண­ச­பைக்கும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கும்

இடையில் பிரி­வினையை ஏற்­ப­டுத்தி அதனை தென்­னி­லங்­கைக்கு தெரி­வித்து அடுத்த தேர்­தலில் சிங்­கள பெரும்­பான்மை
வாக்­கு­களால் வெற்றி பெற முயற்­சிக்­கின்றார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் உண்­மை­யான முகத்­தினை வெகு விரைவில் தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் தமிழ் வர்த்தகர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசான தனக்கு வாக்களிக்குமாறு கேட்டது இப்பொழுது எமக்கு ஞாபகம் வருகின்றது.