செய்திகள்

கமக்கார அமைப்புக்கள் ஊடாக பருவகால குளங்களில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை

கமக்கார அமைப்புக்கள் ஊடாக பருவகால குளங்களில் நன்னீர் மீன் பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருதத்தி அதிகார சபையின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி நிசாந்தன் யோகநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் நன்னீர் மீன்பிடி தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள பருவகால குளங்களில் நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் வகையில் எமது திணைக்களத்தால் உதவிகள் வழங்கப்படுகின்றது. பருவகால குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகளை விட்டால் நீர் வற்றும் காலத்தில் அதில் நிறைவான வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். பருவகால குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்பை மேற்கொள்ள விரும்புவர்கள் அப்பகுதி கமக்கார அமைப்பின் ஊடாக எமது தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையை தொடர்பு கொண்டால் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். நன்னீர் மீனுக்கான கேள்வி அதிகமாக உள்ள போதும் அதற்கான உற்பத்தி மிக குறைவாக காணப்படுகின்றது. எனவே, நன்னீர் மீன்வளர்ப்பை அதிகரிப்பதன் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

N5