செய்திகள்

குகையில் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டனர்! தாய்லாந்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

தாய்லாந்திலுள்ள தாம் லுயாங் குகையில் கடந்த 23ஆம் திகதி முதல் சிக்குண்டிருந்த 12 சிறுவர்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் மீட்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை 4 பேரும் , நேற்று 4 பேரும் இன்றைய தினம் 5 பேருமென சகலரும் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்கானிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை கொண்ட அந்தக் குகையில் சிக்கிக்கொண்டிருந்த அவர்களை கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. இதனை தொடர்ந்து 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் உள்ளிட்ட சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் விசேட சுழியோடி நீச்சல் வீரர்களின் உதவியுடன் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு சுழியோடி வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது சகலரும் மீட்கப்பட்டுள்ளனர். -(3)Plan 115