செய்திகள்

குமார் குணரட்ணம் மீது குற்றப் புலனாய்வுப் இன்று விசாரணை

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் மீது இன்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து செயற்பட்ட குமார் குணரட்ணம், இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டார். அவுஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றுள்ள இவர், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறப்பட்டே நாடு கடத்தப்பட்டிருந்தார்.

இருந்தபோதிலும், ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் மீண்டுடம் கொழும்பு வந்த இவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே குமார் குணரட்ணத்தின் அரசியல் நோக்கங்கள் தொடர்பான விசாணைக்காக அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்.