செய்திகள்

குற்றச்செயலா அல்லது குற்றச்சாட்டா என்பதை அமைச்சரவையே தீர்மானிக்கிறது: மகிந்த

“குற்றச்செயலா அல்லது குற்றச்சாட்டா என்பதனை இன்று பொலிஸார் தீர்மானிப்பதில்லை. அமைச்சரவையே அதனை தீர்மானிக்கின்றது” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை கடுமையாகச் சாடியுள்ளார்.

முன்னாள் தொழில் அபிவிருத்தி அமைச்சர் சீ.வி குணரத்னவின் 15ஆவது நினைவு தின நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் தெஹிவளை நகர சபையில் நடைபெற்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாவது;

“குற்றச்செயலா அல்லது குற்றச்சாட்டா என்பதனை இன்று பொலிஸார் தீர்மானிப்பதில்லை. அமைச்சரவையே அதனை தீர்மானிக்கின்றது. குறித்த நாளில் பசில் அழைக்கப்படுவார். இந்த நாளில் கோட்டாபய அழைக்கப்படுவார், இந்த நாளில் விமல் வீரவங்ச அழைக்கப்படுவார் என தீர்மானித்து யார் வெளிப்படுத்துகின்றனர்?

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நான் பிரிக்க முயற்சிப்பதாகக் கூறுகின்றனர். நான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே போட்டியிட்டேன். அதனை பிளவுபடுத்த முயற்சிக்கவில்லை” எனவும் மகிந்த தெரிவித்தார்.