செய்திகள்

கொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை வழங்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவகம், நக்டா எனப்படும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிடம் உள்ள பி.சி.ஆர் உபகரணங்களை கொரோனா தொற்று நோயை பரிசோதிப்பதற்கு சுகாதார துறையினருக்கு உடனடியாக வழங்குமாறு குறித்த இரண்டு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் கொறோனா தொற்றினை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பி.சி.ஆர். உபகரணங்கள் தேவை அதிகரித்துள்ளமையினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள புத்தளம் – கல்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள நாரா நிறுவனத்தின அலுவலகம் மற்றும் விடுதிகளையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களென சந்தேகிக்கப்படுபவர்களை தங்கவைப்பதற்கான தனிமைப்படுத்தும் மையம் அமைப்பதற்காக தற்காலிகமாக வழங்குமாறும் குறித்த நிறுவனத்தின் தலைவர் நவரட்ணராஜாவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)