செய்திகள்

கொள்ளுப்பிட்டியிலிருந்து தெஹிவளை வரையில் 160 எக்டேரில் உருவாக போகும் கடல் நகரம்

கொழும்பில் கொள்ளுப்பிட்டியிலிருந்து தெஹிவளை வரையில் கடல் பகுதியில் 160 எக்டேர் நிலப்பரப்பை உருவாக்கி கடல் நகரத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் உதவியுடன் கொழும்பில் புதிதாக இரண்டு சுரங்க பாதைகளை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். வட கொழும்பிலும் சுதந்திர சதுக்கம் முதல் பம்பலப்பிட்டி வரையிலும் அது அமைக்கவுள்ளது. இதேவேளை தற்போது 700 ஏக்கர் எந்தவித பிரச்சினையும் இன்றி துறைமுக நகரம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கையாக கொள்ளுப்பிட்டியிலிருந்து தெஹிவளை வரையில் 160 எக்டேரை இதேபோன்று நிரப்பி பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)