கொழும்பில் வீதிகளில் ஆணுறை வழங்கும் மெசின்
கொழும்பில் வீதிகளில் ஆணுறைகளை விநியோகிக்கும் இயந்திரங்களை (condom vending machine) பொறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இயந்திரத்தில் தமது தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்வதன் மூலம் அப்போது கையடக்க தொலைபேசிக்கு வரும் குறியீட்டு இலக்கத்தை குறிப்பிட்டு அந்த இயந்திரத்தினூடாக கொண்டங்களை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இது அமைக்கப்படவுள்ளதாக குடும்ப கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த தொலைபேசி இலக்கத்திற்குறிய கட்டண பட்டியலிலிருந்து அதற்காக 50 ரூபா அறவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)