செய்திகள்

கோதாபயவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் ரூபா செலவு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் ரூபா செலவாகுவதாகவும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிகொதவிலுள்ள ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோதாபய ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக 70 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் , விசேட அதிரடிப்படையை சேர்ந்த 42 உறுப்பினர்களும் மற்றும் இராணுவத்தை சேர்ந்த 28 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என அவர் தெரிவித்துள்ளார். -(3)