செய்திகள்

சர்வாதிகாரப் போக்கின் உச்சநிலை மைத்திரியை கடுமையாக சாடும் கூட்டமைப்பு

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஞா.ஸ்ரீநேசன் சர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தன.

ஆனால் சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனினும், ஜனாதிபதி தனது சர்வாதிகாரப் போக்கைக் கைவிடுவதாக இல்லை.

225 எம்.பிக்களும் ஒன்றாக இணைந்து நின்று கோரினாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உள்ளவரை பிரதமராக நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி அடம்பிடிக்கின்றார். இது அவரின் சர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையைத் தொட்டுக் காட்டுகின்றது என மேலும் தெரிவித்தார்.

ஆனால் இந்தக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கு பதவிகளைக் கொடுத்து அலங்கரித்து சர்வாதிகாரப் போக்குடன் செயற்படுகின்றார் ஜனாதிபதி மைத்திரி. இதன் காரணமாக தமிழ் மக்கள் மத்தியிலிருந்த ஜனாதிபதியின் நன்மதிப்பு இன்று கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது என கடுமையாக குற்றம் சாட்டினார்.(15)