செய்திகள்

சூரியக் கிரகணத்தை பார்க்க முன்னர் இந்த அறிவித்தலை பின்பற்றுங்கள்

இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நெருப்பு வலய சூரியக் கிரகணம் நிகழவுள்ள நிலையில் இதனை வெற்றுக் கண்களால் பார்வையிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை ஆப்பிரிக்கா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான், இலங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ளவர்களால் பார்க்க முடியும். அன்று காலை 9:15 முதல் மாலை 3:04 வரை என மொத்தம் 6 மணி நேரம் இந்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
எவ்வாறாயினும் வெளிநாடுகளில் வலயமாக சூரியக் கிரகணம் தென்பட்டாலும் இலங்கையில் பகுதியளவிலேயே தென்படுமென இலங்கை கோள்மண்டலம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் முற்பகல் 10.24 மணி முதல் கிரகணம் தென்படவுள்ளது. முதலில் யாழ்ப்பாணத்தில் தென்படவுள்ளதுடன் அதன்பின்னர் 10.25 மணிக்கு கொழும்பில் தென்படும். அதன் பின்னர் 11.51 மணியளவில் அது உச்சமடையவுள்ளது. பின்னர் 1.30 மணியளவில் முடிவடையவுள்ளது.
சூரியக் கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்வையிட வேண்டாமெனவும் பாதுகாப்பான கண்ணாடிகள் மூலம் அதனை பார்க்குமாறும் இலங்கை கோள் மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். -(3)