செய்திகள்

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க திட்டமா?

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டு யோசனையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறாக நடக்குமாக இருந்தால் அது அரசாங்கத்தின் இறுதியாக இருக்குமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.
ஐ.தே.கவின் பின் வரிசை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.ம.சு.கூவின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர அவ்வாறு செய்தால் அரசாங்கமும் முடிந்துவிடுமென தெரிவித்துள்ளார். -(3)