செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு ஜே.வி.பியிலிருந்து வேட்பாளர்?

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் 20ஆவது அரசியலமைப்பு திருதத்தை நிறைவேற்ற நடவடிக்கையெடுக்காவிட்டால் தமது கட்சி சார்பாகஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் பிரசார செயலாளரான விஜித ஹேரத்தினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார முறையை இல்லாது செய்வதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பாக விவாதத்தை நடத்தி நிறைவேற்றுவதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்காது இருக்கின்றமை ஜே.வி.பிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. -(3)