செய்திகள்

ஜெனிவா விவகாரம் : மகிந்த அணி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி அதற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு மகிந்த அணியினர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த யோசனை இலங்கை இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் வகையில் அமைவதுடன் அது இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் நடவடிக்கையாகவும் அமையுமெனவும் இதனால் அந்த யோசனைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதை தடுத்து நிறுத்துவதுடன் சர்வதேச நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு சார்பாக பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வெளிநாடுகளிலுள்ள தூதுவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குமாறு அவர்கள் அந்த கடிதத்தினூடாக ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன , விமல் வீரவன்ச , உதய கம்மன்பில , வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட ஐ.ம.சு.கூவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் இவ்வாறாக கூட்டாக ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். -(3)