செய்திகள்

தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் மனு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். தந்தை குயில்தாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீபத்தில் இருமாத காலம் பேரறிவாளன் பரோலில் வெளிவந்திருந்தார். பரோல் முடிந்து மீண்டும் சிறை திரும்பினார்.

இந்நிலையில், பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ´வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கித்தந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், எனக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இதுகுறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது என, தமிழக ஊடகமான விகடன் செய்தி வௌியிட்டுள்ளது.

n10