செய்திகள்

தமிழகத்தில் தலைவர்களை சந்தித்த திகாம்பரம்

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு நேற்று நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோரைச் சந்தித்து சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியமை தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளனர்.

அத்துடன், ஊடக சந்திப்பொன்றையும் நடத்திய அவர்கள், நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக மலையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையில் தேசிய தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர். அவருக்கு பழைய நாடாளுமன்ற முன்றலில் சிலையும் புதிய நாடாளுமன்றில் உருவப்படமும் வைக்கப்பட்டு இலங்கை அரசினால் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிங்கள அரசு அன்னாரது பெயரில் அமைக்கப்பட்ட கல்லூரியின் பெயர்ப் பலகையை நீக்கியதாக தவறாக வழிநடத்தப்பட்டுள்ளமையை தெளிவுபடுத்தியுள்ளதாகவும்,சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களையும் நிர்வகிப்பதாக ஏற்பாடு செய்து சௌமியமூர்த்தி தொண்டமான் என்பதற்கு பதிலாக தொண்டமான் எனும் பெயரே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது.

அந்த தொண்டமான் என்ற பெயருடனேயே அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சி தமது அரசியலை குடும்ப அரசியலை முன்னெடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எந்த இடத்திலும் சௌமியமூர்த்தி தொண்டமான் எனும் பெயர் நீக்கப்படவில்லை என்பதையும் அவர் பெயரிலான மன்றம் இயங்குவதில் இலங்கை அரசு எவ்வித தடங்கலையும் எற்படுத்தவில்லை என்பதை துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தெளிவுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.th th2