செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் நாடு பூராகவும் போட்டியிட திட்டம்?

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் போதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாத்திரமன்றி நாடு பூராகவும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரவிக்கப்படுகின்றது. இதற்காக கட்சியின் பெயரில் மாற்றத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளதாக கூட்டமைப்பின் எம்.பி.யொருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு கிழக்கென்ற எல்லைகளை கடந்து சகல பிரதேசங்களையும் பிரதிநிதித்துவம் படுத்தும்; நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி தென் பகுதியில் மற்றைய தமிழ் , முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாகவும் அத்துடன் ஜே.வி.பி மற்றும் பிவித்துரு ஹெட்ட அமைப்பு ஆகியவற்றுடன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடலை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.