செய்திகள்

தினேஸ் சந்திமலின் எதிர்காலத்தை அழிக்கிறார் சனத்ஜெயசூர்ய- ரணதுங்க கடும் குற்றச்சாட்டு

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தினேஸ் சந்திமல் அணியில் சேர்க்கப்படாதமைக்காக முன்னாள் அணித்தலைவர் அர்ஜூண ரணதுங்க கடும் கண்டம் வெளியிட்டுள்ளார்
சனத்ஜெயசூர்ய தலைமையிலான தெரிவுக்குழுவினர் திறமைவாய்ந்த வீரர்களின் எதிர்காலத்தை அழித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்
மகேல மற்றுமட குமார் சங்ககாரவிற்கு பின்னர் இலங்கைக்கு கிடைத்த திறமையான வீரர்கள் லகிரு திரிமன்னவும் தினேஸ் சந்திமலும் என நான் கருதுகிறேன் என தெரிவித்துள்ள ரணதுங்க அவர்களில் ஓருவரின் கிரிக்கெட் வாழ்க்கையை தெரிவுக்குழுவினர் அழித்துவிட்டனர் மற்ற வீரரின் கிரிக்கெட் வாழ்வை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இயல்பான திறமையை அழிக்கவேண்டாம் என நான் தெரிவுக்குழுவினரை கேட்டுக்கொள்கிறேன் வீரர்களின் திறமையை சரியான விதத்தில் கையாளததே இலங்கை அணியின் இன்றைய நிலைக்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீரர்கள் குறித்து பொறுமையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ரணதுங்க மார்வன் அத்தப்பத்து சனத்ஜெயசூரிய போன்ற வீரர்கள் நீண்ட காலத்திற்கு பின்னரே தங்கள் திறமையை வெளிப்படுத்த தொடங்கியதாக தெரிவித்துள்ளார்
சனத்ஜெயசூர்ய தனது முதல் 55 போட்டிகளில் ஓரேயொரு அரைச்சதத்தை மாத்திரம் பெற்றார் அவரை அணியிலிருந்து நீக்குமாறு எங்களிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது ஆனால் அனுபவத்தின் பின்னர் அவரால் பல விடயங்களை சாதிக்க முடியும் என தெரிந்ததால் நாங்கள் அவரை அணியில் தொடர்ந்தும் வைத்திருந்தோம் என ரணதுங்க தெரிவித்துள்ளார்.