செய்திகள்

‘திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்படாது’

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கோ வேறெந்த நாட்டுக்கோ தாரைவார்க்க முற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிரதமர்இ

“இந்தியா வங்காள விரிகுடாவுக்குள் அமைந்துள்ள ஒரு நாடுஇ அந் நாடு வர்த்தக நடவடிக்கைகளுக்காக திருகோணமலைத் துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பி அனுமதி கோரியுள்ளது.

அதன் மூலம் இலங்கைக்கு சாதகமான நன்மைகளைப் பெற முடியும் என்பதால் அதற்கான அனுமதியை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இதேபோன்று ஜப்பானும் தனது விருப்பத்தைக் கோரியுள்ளது. இது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

சிங்கப்பூர் மற்றும் எந்தவொரு நாடாக இருப்பினும் வங்காள விரிகுடாவை வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள திருகோணமலைத் துறைமுகத்தை கேந்திரமாகப் பயன்படுத்த விண்ணப்பித்தால் அது குறித்து சாதகமாக ஆராய முடியும்.

அப்படிச் செயற்படுவதை எமது துறைமுகத்தை மற்றொரு நாட்டுக்கு தாரை வார்ப்பதாக கருத முடியாது.

எமது நாட்டின் எந்தவொரு வளத்தையும் நாம் எவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை. சிலர் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றனர்.

கடந்த ஆட்சியின் போது எமது வளங்கள் விற்கப்பட்டது போன்று அரசாங்கம் செய்ய முற்படமாட்டாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

n10