செய்திகள்

துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் குளுஸ்னரின் வார்த்தைகளே சிம்பாப்வேயின் மீள் எழுச்சிக்கு காரணம்- சிக்கந்தர் ரசா

இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் ஓரு கட்டத்தில் மோசமான நிலையில் காணப்பட்ட சிம்பாப்வே அணியை துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் லான்ஸ் குளுஸ்னரின் வார்த்தைகளே மீள் எழுச்சி பெறச்செய்தன என இரண்டாவது இனிங்ஸில் சதம் அடித்த வீரர் சிக்கந்தர் ரசா தெரிவித்துள்ளார்.
மூன்றாம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது நான்கு விக்கெட்களை குறைந்த ஓட்டங்களிற்கு இழந்ததால் நாங்கள் நம்பிக்கை இழந்தோம் அவ்வேளை எங்களிற்கு சில அறிவுரைகளை வழங்கிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் லான்ஸ் குளுஸ்னர் நாங்கள் போராடி தோற்கிறோமா அல்லது போராடாமல் தோற்கிறோமா என்பது அடுத்து வரும் துடுப்பாட்ட வீரர்களின் கரங்களிலேயே உள்ளது என தெரிவித்தார் என் சிக்கந்தர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் திட்;டமிடுவோம் பின்னர் அவருடன் அது குறித்து கலந்துரையாடுவோம் அவர் தனது அனுபவத்தின் அடிப்படையில் சில விடயங்களை தெரிவிப்பார் எங்கள் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கும் எங்களிற்கும் இடையில் சிறந்த உறவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.