செய்திகள்

தொண்டமானின் பெயரை நீக்கிய விவகாரம் : இ.தொ.கா ஜனாதிபதியிடம் முறையிட்டது

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பாக இ.தொ.காவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளனர்.
ஹட்டனில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. மலையகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்ற நிலையில் இ.தொ.காவினர் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர். -(3)