செய்திகள்

பட்டதாரிகளுக்கு பரீட்சை – ஏற்றக்கொள்ளமுடியாது என்கிறது மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பரீட்சைகள் வைத்து வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ள கருத்தினை ஏற்றுக்கொள்ளமுடியாது என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 62வது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமது தொழிலுரிமையினை உறுதிப்படுத்துமாறு இரவு பகலாக வீதியில் படுத்துறங்கி தொடர்ச்சியான போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கம் பட்டதாரிகள் தொடர்பி;pல் விடுத்துவரும் முரண்பாடான கருத்துகள் தமக்கு மனவேதனையளிப்பதாகவுள்ளதாக பட்டதாரிகள் தெரிவித்தனர்.

தமது போராட்டத்தின் ஒரு அம்சமாக பட்டதாரிகளுக்கு பரீட்சை வைக்காமல் நேர்முக தேர்வினை நடாத்த pஉள்ளீர்க்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.எனினும் அதற்கு மாறாக 20ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு பரீட்சை வைக்கவுள்ளதாக அமைச்சர் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதனை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போதில்லையெனவும் பட்டதாரிகளை நேர்முகத்தேர்வினை நடாத்தி அரச சேவையில் உள்ளீர்க்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது நியாயமான போராட்டத்தினை மனப்பூர்வமாக உணர்ந்து அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

DSC05967 DSC05973