செய்திகள்

பருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை சிறியிடம் மகஜர் கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும், இதனை அகற்றாவிடின் தமது போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்த மதுபானசாலை கடந்த 7 வருட காலமாக அனுமதிப்பத்திரம் மற்றும் கட்டட அனுமதியின்றி இயங்கி வருவதாக குற்றம் சாட்டினர்.மேலும், இந்த மதுபானசாலை பாடசாலை மாணவர்களும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.1

குறித்த போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ப.சுரேஸ் குறித்த மதுபான சாலை இயங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறித்த மதுபான சாலை உரிமையாளருக்கு சார்பாக செயற்படுவதாகவும்.தாம் முன்னர் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த மதுபான சாலை தொடர்பாக முறையிட்டபோது அது இயங்குவதற்க்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று தெரிவித்திருக்கின்றார்.

குறித்த மதுபான சாலைக்கு பருத்தித்துறை நகரசபை வியாபார உரிமம் வழங் வழக்கப்படாத நிலையில் குறித்த மதுபான சாலை உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உரிமம் கோரிவருவதாகவும் கடந்த ஏழு வருடங்களாக கட்டட அனுமதி, வியாபார அனுமதி இன்றி இயங்கி வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.(15)