செய்திகள்

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஆபத்து அதிகம்

புகைத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு அதிகமாகவே இருக்குமென ஐ.டி.எச் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
அவர் அது தொடர்பாக கூறியுள்ளதாவது,
கொரோனா தொற்றியதும் நோய் சுவாச கட்டமைக்குள்ளேயே ஏற்படும். இது நிமோனியாவை ஏற்படுத்தும். சுவாச கட்டமைப்பில் நுரையீரல் முக்கியமானதாகும். இது நோய் தடுப்பு தன்மையுடன் இருக்கும் போது வைரசால் பாதிப்புகள் குறைவாக இருக்கும். ஆனால் புகைத்தலில் ஈடுபடும் ஒருவரின் நுரையீரல் நோய் தடுப்பு தன்மையற்றதாகவே இருக்கும். இதன்போது இலகுவில் வைரஸ் தாக்கும். இதனால் மரணம் ஏற்படக் கூடும். சீனாவில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. -(3)