செய்திகள்

புதிய அரசாங்கத்தினால் வரிகள் குறைப்பு : விபரங்கள் இதோ

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் மீதான வரிகளை குறைப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் பருப்பு மற்றும் கடலை மீதான விசேட வர்த்தக வரி 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் உழுந்து மீதான வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா மீதான தீர்வை வரி சலுகை 6 ரூபாவில் இருந்து 9 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படுகின்ற சீனி மீதான வரியும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
சமுர்த்தி வங்கிகள் ஊடாக வழங்கப்படுகின்ற கடன் தொகையை 10,000 ரூபா வரை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொலைத் தொடர்பு வரியை 25 வீதத்திலிருந்து 15 வீதம் வரை குறைக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. -(3)