செய்திகள்

புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்கு மீண்டும் பிர­ஜா­வு­ரிமை வழங்­கக்­கூ­டா­து: ­அ­மைச்சர் சம்­பிக்க ரண­வக்க

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மீண்டும் இலங்­கையில் பிரஜாவுரிமை வழங்குவது சாத்தியமற்றது. அவர்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தமே இலங்கையில் தமிழர் எண்ணிக்கை குறையக் காரணமாகும். இதற்கு யுத்தத்தை காரணம் காட்டு வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உறுமயவினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு மீண்டும் இலங்கையில் பிரஜாவுரிமை வழங்க வேண்டும் என இங்குள்ள தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இது ஒரு சந்தர்ப்பத்திலேனும் சாத்தியமற்றதாகும். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெயர்ந்த மற்றும் அகதிகளாக வெளியேறிய மக்களை விடவும் சிறிமா- – சாஸ்திரி ஒப்பந்தத்தில் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையே அதிகமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஐந்து லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இதுவே இலங்கையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை வீதம் குறைவடைய காரணமாகும்.

தீக்சித்- – அதுலத்முதலி ஒப்பந்தத்தின் மூலமாக இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் 65ஆயிரம் தமிழர்கள் பிரஜாவுரிமை அந்தஸ்து வழங்கி குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறான நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழ் மக்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவருவது என்பது சாத்தியமற்ற விடயமாகும்.

ஆனால் இன்று தமிழ்த் தலைமைகள் யுத்தத்தை காரணம் காட்டி இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழ் மக்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.ஆகவே புலம்பெயர் மற்றும் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு வர­வ­ழைக்க முடியாது.

அதேபோல் யுத்த காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து வெளியேறிய சிங்கள, முஸ்லிம் மக்கள் மீண்டும் அப்பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்க ளுக்கான அரசியல் மற்றும் வாக்குரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்­றார்.