செய்திகள்

புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் 6 மாதங்களுக்கு நீடித்தது

விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஓன்றியம் மேலும் 6 மாதங்களுக்கு நீடித்துள்ளது.
இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியத்தின் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதிமுறைகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் மீண்டும் விடுதலைப்புலிகளை, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தது.

இதேவேளை விடுதலைப்புலிகளால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதனை ஐரோப்பிய ஓன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளுக்கும் எடுத்துரைத்துள்ளதாக பிரசல்ஸிற்கான இலங்கை தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.