செய்திகள்

புல்லை உண்ணும் நிலை வந்தாலும் வடகொரியா அணுவாயுத திட்டங்களை தொடரும்- ரஸ்ய ஜனாதிபதி கருத்து

வடகொரியாவிற்கு எதிராக மேலும் தடைகளை விதிப்பது அர்த்தமற்றது என தெரிவித்துள்ள புட்டின் வடகொரியா ஜனாதிபதி புல்லை உண்டாலும் அணுவாயுத திட்டங்களை கைவிடமாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

யுத்த உணர்வுகளை தூண்டுவது சர்வதேச பேரழிவிற்கு வழிவகுக்க கூடும் எனவும் புட்டின் எச்சரித்துள்ளார். சீனாவின் பிரிக்ஸ் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ரஸ்ய ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

வடகொரியா சீற்றத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை ஏற்றுக்கொண்டுள்ள புட்டின் அதேவேளை அந்த நாட்டிற்கு எதிரான தடைகளால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள பாதுகாப்பாக இருக்கின்றோம் என்ற உணர்வு ஏற்படும் வரையில் அவர்கள் புல்லை தின்றும் தங்கள் அணுவாயுத திட்டத்தினை தொடர்வார்கள் என புட்டின் தெரிவித்துள்ளார்.